கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு ஆதிதிராவிட விடுதி இயங்கி வருகிறது. இதில் மாணவிகளுக்கு என இரண்டு விடுதி உள்ளது. ஒன்று அரசு கட்டிடத்திலும் இன்னொன்று தனியார் கட்டிடத்திலும் வாடகைக்கு செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் தான் அரசு மெனு படியான உணவு மாணவிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என மாணவிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
மெனுவின் படி உணவு போடவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, போடுகின்ற உணவையும் கல்லும், புழுவுமாய் இல்லாமல் போட்டாலே போதும். ஆனால் அதையும் சரியாக போடுவதில்லையே, மார்கெட்டில் கிடைக்கும் விலைக்கு போகாத கெட்டுப்போன காய்கறிகளை வாங்கிவந்து அதில்தான் உணவு சமைத்து போடுறாங்க, அதில் வண்டும், புழுவுமாய் உணவில் மிதக்கிறது. இதை மாணவிகள் விடுதி வார்டனிடம் கேட்டால், நாங்க என்ன செய்யமுடியும் என்ன அரசு கொடுக்கிறதோ அதைத்தான் செய்து தருகிறோம் என்கின்றனர் மாணவிகள்.
இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் போராட்டத்தில் இறங்கிய போது, கல்லூரியிலும் படிக்கனுமா வேண்டாமா என்று கல்லூரி நிர்வாகம் மாணவிகளை மிரட்டுகிறார்கள் என்று இந்திய மாணவர் சங்கம் கிருஷ்ணகிரி மா.செ வான இளவரசன் கூறுகிறார். இது மட்டும் இல்லையங்க, இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் பெண்களின் நிலை சொல்லமுடியாத அவலத்திற்கு உள்ளது. அக்கல்லூரியில் கழிப்பறை வசதி இல்லை என கேட்டதற்கு மூன்று கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது நிர்வாகம். அவர்களின் பெயரை சொல்லி மீண்டும் அவர்களின் வாழ்க்கையில் விளையாட விரும்பவில்லை.இதற்கு கண்டிப்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் போராட்டம் அறிவிப்போம் என தெரிவித்தார்.