வேலூர் - லஞ்சம் வாங்கியபோது கைதான மாநகராட்சி ஆணையர்
வேலூர் மாநகரம் வேலப்பாடியை சேர்ந்தவர் பாலாஜி (30). இவர் மாநகராட்சி ஒப்பந்ததாரராக உள்ளார். கடந்த ஏப்ரல், மே, ஜீன் மாதங்களில் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக சுகாதார பணியாளர்களை அனுப்பினார். இதற்கான தொகையை மாநகராட்சி இவருக்கு வழங்க வேண்டும்.
10.23 லட்சம வழங்கவேண்டும். அந்த தொகையை கேட்டு பாலாஜி, வேலூர் மாநகராட்சி ஆணையராக உள்ள குமாரிடம் கேட்டுள்ளார். அந்த பணத்தை தர 2 சதவிதம் 22 ஆயிரம் கமிஷன் தந்தால் உடனே செக் தருகிறேன் என்றுள்ளார்.
இதில் அதிருப்தியான பாலாஜி, வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் தந்துள்ளார். புகாரை வாங்கி பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை, குமாரை ஆதாரங்களோடு பிடிக்க ரசாயனம் தடவிய 20 ஆயிரம் ரூபாயை பாலாஜியிடம் தந்து இன்று 9ந்தேதி காலை 12 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்துக்கு அனுப்பினர்.
அலுவலகத்தில் இருந்த ஆணையர் குமார், பாலாஜியை புன்னகையோடு வரவேற்று அவர் தந்த 22 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி எண்ணி பாக்கெட்டில் வைத்துள்ளார். லஞ்சம் வாங்கியதை உறுதி செய்துக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார், குமாரை சுற்றி வளைத்து, அவரது அறையில் வைத்து விசாரணை நடத்தினர். அதோடு, அவரது அலுவலம், வீடு போன்றவற்றிலும் ரெய்டு செய்து வருகின்றனர்.
அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை நீதிபதி முன் நிறுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைக்கும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் ஈடுப்பட்டுள்ளனர். இது வேலூர் மாநகரத்திலும், மாநகராட்சி பணியாளர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ராஜா