இன்று நடிகர் திலகம் என போற்றப்படும் நடிகர் சிவாஜி கணேசனின் 92 ஆவது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் அடையாரிலுள்ள மணிமண்டபத்தில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் உருவ சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்புர்ராஜு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா இன்று அரசு சார்பில் மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது. குறிப்பாக எந்த கேரக்டெர் கொடுத்தாலும், வீரம் செறிந்த கேரக்டராக இருந்தாலும் சரி, ரொமான்ஸ் கேரக்டராக இருந்தாலும் சரி, அதேபோல் காவியப்படங்கள் என அத்தனையிலும் முத்திரை பதித்தவர் நடிகர் சிவாஜி கணேசன்.
அதேபோல் அவர் திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்களும் குறிப்பாக தத்துவப்பாடல்கள் மிக சிறப்பாக இருக்கும் எனக்கூறிய அமைச்சர் ஜெயக்குமார். ''ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு'' என்ற பாடலின் சில வரிகளை செய்தியாளர்கள் முன்னே பாடிக்காட்டினர்.