Skip to main content

மாவட்டம் பிரிப்பு - மக்களிடம் கருத்து கேட்பிலும் கட்டுப்பாடு

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

 

 வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரிப்பது தொடர்பாக வரும் 29, 30 ஆகிய தேதிகளில் கருத்து கேட்புக்கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

v

 

வேலூர் மாவட்டத்தினை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் என கடந்த 15.08.2019 அன்று தமிழக முதல்வர் அறிவித்தார். புதிய மாவட்டங்கள் தோற்றுவிப்பது தொடர்பாக கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் முனைவர் சத்தியகோபால் இ.ஆ.ப தலைமையில் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

 

29.08.2019 காலை 11.30 மணி முதல் 01.30 மணிவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை கல்லூரி கலைரங்கில் வேலூர் மாவட்டம் தொடர்பாகவும்,

 

29.08.2019 மதியம் 03.30 மணி முதல் 6.30 மணிவரை வாணியம்பாடி சின்னக்கல்லுபள்ளியில் உள்ள மருதகேசரி ஜெயின் பெண்கள் கல்லூரி கலையரங்கில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கும், 

 

30.08.2019 அன்று காலை 09.30 மணி முதல் 01.00 மணிவரை மேல்விஷாரத்தில் உள்ள அப்துல் ஹகீம் பொறியியல் கல்லூரி கலையரங்கில் ராணிப்பேட்டை மாவட்டம் தொடர்பான கருத்துக்கேட்பு  கூட்டங்கள் நடைபெறும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். 

 

கூட்டத்திற்கு என சில விதிமுறைகள் கூறியுள்ளனர். அதன்படி, 

கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு மனு அளிக்க விரும்புவோர் 2 மணி நேரத்திற்கு முன்பாக கூட்ட அரங்கிற்கு வந்து கூட்ட வளாகத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள மையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும், பதிவு செய்த மனுக்கள் மட்டும் பெறப்படும்.

 

கூட்டத்தில் பேச விரும்புவோர் முன்கூட்டியே வளாகத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள மையத்தில் தங்களது பெயர், இருப்பிட முகவரியை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவுடன், அவர்களுக்கு பிரத்யோக டோக்கன் வழங்கப்படும் அந்த டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே பேச முடியும். 

 

வாய்மொழியாக அளிக்கப்படும் எந்தவொரு கோரிக்கையும் ஏற்கப்படமாட்டாது. எழுத்து மூலமாக அளிக்கப்படும் கோரிக்கை மட்டுமே ஏற்கப்படும். 

 

வேலூர் மாவட்டத்தில் எந்த பகுதியை சார்ந்தவராக இருந்தாலும் எந்த கூட்டத்தில் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

சார்ந்த செய்திகள்