Skip to main content

வேடந்தாங்கல் – சன்பார்மா நிறுவன விரிவாக்கத்துக்கு தடை கோரிய வழக்கு! -அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு விளக்கம்!

Published on 24/07/2020 | Edited on 25/07/2020
Vedanthangal - Case filed seeking ban on Sun Pharma expansion! Tamil Nadu government explains that permission has been denied!

 

வேடந்தாங்கல் சரணாலயம் அருகே செயல்பட்டு வரும் 'சன் பார்மா' நிறுவனத்துக்கு, விரிவாக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாக,  சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் முக்கிய சரணாலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சரணாலயம் அருகே செயல்பட்டு வரும் சன் பார்மா நிறுவனத்தை, விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கக்கோரி,  சுற்றுச்சூழல் ஆர்வலர் வெண்ணிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு,  நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக சன் பார்மா நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்றிருந்தாலும், மத்திய வனவிலங்கு பாதுகாப்பு ஒப்புதல் நிராகரிக்கப்பட்டுள்ளதால்,  தொழிற்சாலை விரிவாக்கம் செய்வதற்கு கடந்த மாதம் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாக, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சரணாலயம் அமைந்திருக்கு பகுதிகளை மேம்படுத்தும் நோக்கிலேயே 5 கி.மீ என்ற சுற்றுப்பரப்பளவை 3 கி.மீட்டராக குறைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

 

இதைக் கேட்ட நீதிபதிகள், வேடந்தாங்கல் நிலபரப்பு குறைக்கப்படுவதற்கு எதிராக, மத்திய அரசிடம் மனு அளித்து,  மனுதாரர் நிவாரணம் பெற்று கொள்ளலாம் எனத் தெரிவித்து  வழக்கை முடித்து வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்