சுதந்திர தினத்தை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமை இயங்கும்
சென்னையில் வருகிற 15ம் தேதி செவ்வாய்க்கிழமை வண்டலூர் உயிரியல் பூங்கா, மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா பார்வையாளர்களுக்காக திறந்து இருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பூங்கா பராமரிப்பு பணிக்காக வழக்கம்போல் செவ்வாய்க்கிழமையன்று வார விடுமுறையாக அனுசரிக்கப்படும். ஆனால் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா பார்வையாளர்களுக்காக திறந்து இருக்கும்.