மதுரை என்றாலே போஸ்டருக்கு பஞ்சமில்லை. உயிர் கொல்லியின் உயிர் கொல்வோம் தலைவரின் ஆணையை ஏற்று என்று மோடி படத்துடன் ஜெயலலிதா படம்,எடப்பாடி-ஓபிஎஸ் படத்தோடு செல்லூர் ராஜு ஆதரவாளர் சோலைராஜா கிரம்பர் சுரேஷ் ஒட்டியுள்ள போஸ்டர் மதுரையில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், "தமிழா தனித்திரு தனிமையே தேசத்தின் ஒற்றுமை" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னொரு போஸ்டரில், ஏய் கரோனா என் மக்களையே டர்ர்ர்... ஆக்குகிறாயா??? என ஒட்டப்பட்டுள்ளது. அதில், முருகனும் நாரதரும் பேசிக்கொள்வது போல் உள்ளது. வேலோடு விளையாடியே போர் அடித்து விட்டது, நான் விளையாட வேறு ஏதேனும் புதிதாய் கொண்டு வாருங்களேன் என நாரதரைப் பார்த்து முருகன் கேட்கிறார்.
அதற்கு நாரதர், முருகா... பூமியில் கரோனா வைரஸ் எனும் கிருமி மனிதர்களை அச்சுறுத்தி கொண்டு இருந்தது, அதனையே பிடித்து வந்துள்ளேன். அதனிடம் காட்டு உனது திருவிளையாடலை... நாகரிகத்தையும், பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் உலகின் எட்டுத்திக்கிற்கும் கற்பித்த தமிழ் சமூகமே, அதனையே பின்பற்று எதற்கும் அஞ்சாதே, நான் இருக்கிறேன் உன்னோடு.. யாமிருக்க பயமேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாரதர் வேடத்தில் வடிவேலுவைப் போஸ்டரில் அச்சடித்துள்ளனர். இந்தப் போஸ்டரும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மதுரையில் சினிமா, அரசியல் சம்மந்தமாக விதவிதமாக போஸ்டர்கள் ஒட்டப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதே நேரத்தில் போஸ்டர் பிரியர்கள் கரோனாவையும் விட்டுவைக்கவில்லை.கிளம்பிட்டாய்ங்கய்யா கிளம்பிட்டாய்ங்கய்யா ...!