வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகள் வழங்கும் கட்சியோடு நாங்கள் கூட்டணி வைப்போம் என்று தேசிய செட்டியார்கள் பேரவை அறிவித்துள்ளது.
தேசிய செட்டியார்கள் பேரவையின் மாநில மகளிர் அணி மாநாடு திருச்சியில் இன்று (10/01/2021) நடைபெற்றது இந்த மாநாட்டிற்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் ஜெகநாத் பேசுகையில், "வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் 20 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கக் கூடிய கட்சியோடு நாங்கள் கூட்டணி வைப்போம். விவசாயத்திற்கான நீர்நிலை ஆதாரங்கள் அனைத்தையும் அதிகப்படுத்தி முல்லை பெரியார், வைகை மற்றும் மேட்டூர் அணைகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்திட வேண்டும். தமிழக எல்லைப் புற பகுதிகளில் அணைகளை அரசு கட்ட வேண்டும். ஆன்லைன் மருந்து வணிகத்தை மத்திய, மாநில அரசுகள் தடுத்திட வேண்டும். சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கூட்டத்தைக் கூட்டி செட்டியார்களின் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டிய பிறகு நாங்கள் கூட்டணி குறித்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக"க் கூறினார்.
பெண்களுக்கு வங்கிக் கடன் வழங்குவதில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.