வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் என்பது நீண்ட நாட்களாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இந்த போராட்டத்தில் இன்றைய தினம் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் லக்கிம்பூர் பகுதியில், மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகன் அஜய் மிஸ்ராவின் சென்ற கார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் மீது மோதியது. இதில் விவசாயிகள் நான்கு பேர் மரணமடைந்தனர். மேலும் இப்பிரச்சனையில் நடைபெற்ற கலவரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு அமைப்புகளும், விவசாயச் சங்கங்களும் கண்டங்களைத் தெரிவித்துவருகின்றன. இந்நிலையில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.