Skip to main content

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலி!

Published on 16/09/2017 | Edited on 16/09/2017
குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலி!

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டியை அடுத்த வவ்வாநேரி கிராமத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

முக்கண்ணாமலைப்பட்டி அடுத்த வவ்வாநேரியை சேர்தவார்கள் முரளிதரன் மற்றும் செந்தில்குமார் இருவரும் பக்கத்து, பக்கத்து வீட்டினர்கள். இதில் முரளிதரன் மகன் ஜெயசூர்யா வயது-11 இந்த மாணவன் முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றான். செந்தில்குமார் மகன் லெட்சுமணன் வயது-9 என்ற மாணவன் முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நான்காம் வாகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நண்பர்கள்.

கடந்த சில நாட்களாக ஆசியர்கள் வேலை நிறுத்தத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நண்பர்கள் இருவரும் வாவ்வாநேரியில் உள்ள பட்டவன் ஊரணிக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு சென்ற இருவரும் துணிகளை குளத்து கரையில் கழட்டி வைத்துவிட்டு குளத்தில் இறங்கியுள்ளனர். குளத்தில் சேறும் சகருமாக இருந்ததை கவனிக்காமல் உள்ளே சென்ற இருவரும் சிறிது நேரத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
 
சிறிது நேரத்தில் அந்த பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஜெயசூர்யாவின் பாட்டி ஈஸ்வாரி, மற்றும் லெட்சுமணனின் பாட்டி ராசம்மாள் ஆகிய இருவரும் குளத்து கரையில் இருந்த துணிகளை பார்த்துள்ளனர். பக்கத்தில் வந்து பார்த்த போதுதான் குளத்தில் பேரன்கள் மூழ்கியது தெரிந்துள்ளது. உடனடியாக இருவரும் சந்தம் போட்டு அருகில் இருந்தவர்களை அழைத்து குளத்திற்குள் கிடந்த ஜெயசூர்யா மற்றும் லெட்சுமணன் ஆகியோர் உடல்களை மேலே கொண்டுவந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி மற்றும் போலீசார் உடல்களை கைபற்றி வழக்கு பதிவு செய்து பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
  
- இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்