Skip to main content

முதல்வர் வைத்த ‘இரண்டு சல்யூட்’; காவலர்களின் சத்தத்தால் அதிர்ந்த அரங்கம்

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

'Two salutes' by the Chief Minister; The hall shook with the noise of the guards

 

தமிழ்நாடு மகளிர் காவல்துறையின் பொன்விழா ஆண்டின் விழாவில் பெண் காவலர்களுக்கு இரண்டு சல்யூட் என்று முதலமைச்சர் சல்யூட் வைத்த நொடி அரங்கம் காவலர்களின் சத்தத்தால் அதிர்ந்தது.

 

1973 ஆம் ஆண்டு முதல் தமிழக காவல்துறையில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். 2023 ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் காவல்துறைக்கு பொன்விழா ஆண்டாகும். நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு மகளிர் காவல்துறையின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பு தபால் தலையினை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து ‘அவள்’ திட்டத்தைத் துவக்கி வைத்த முதலமைச்சர், மிதிவண்டி பேரணியையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்விழாவில் அணிவகுப்பு மரியாதை முதற்கொண்டு அனைத்து நிகழ்வுகளும் முழுக்க மகளிர் காவல்துறையினரால் நடத்தப்பட்டது. 

 

இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் இன்று 39 ஆயிரத்து 329 பெண் காவலர்கள் பணியாற்றுகின்றனர். கலைஞர் துவக்கி வைத்த சகாப்தத்தின் பொன்விழா ஆண்டில் அவரது மகனான நான் முதலமைச்சராக கலந்து கொண்டது எனக்கு கிடைத்துள்ள பெரும் பெருமை. நேரம், காலம், வெயில், மழை, இரவு, பகல் பாராமல் ஊருக்காக உழைக்கும் காவலர்களைப் பாராட்டும் விழா இது. பெண்களுக்கான விழா இது.

 

பொன்விழா ஆண்டு வருகிறது எனச் சொன்னவுடன் இதை பெரிய விழாவாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டேன். பெண்களின் தியாகத்தை மதிக்க வேண்டும் என்பதற்காக இதைச் சொன்னேன். காவல் பணியுடன் குடும்பப் பணியையும் சேர்த்து செய்வதற்கான நெருக்கடி பெண் காவலர்களுக்கு இருக்கிறது. ஆண் காவலர்களுக்கு ஒரு சல்யூட் என்றால் பெண் காவலர்களுக்கு ரெண்டு சல்யூட். அதனால் அனைத்து இடங்களிலும் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு முழு மரியாதை அளிக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்