Skip to main content

பட்டப்பகலில் மூதாட்டியிடம் செயின் பறித்த இளைஞர்கள் 

Published on 05/09/2022 | Edited on 05/09/2022

 

two man snatched chain from old lady karur

 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் பிச்சைமணி. இவரது மனைவி ராஜேஸ்வரி ( 65). இவர் இதே பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவர் வீட்டில் சமையல் வேலை செய்து வருகிறார்.   வழக்கம் போல் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  வீட்டிற்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது ஒரு இளைஞர் தனியாக நடந்து செல்ல,  அவரை தொடர்ந்து ஹெல்மெட் அணிந்த இளைஞர் இரு சக்கர வாகனத்தில் அந்த மூதாட்டியை கடந்து சென்றுள்ளார். 

 

அப்போது திடீரென முன்னால் நடந்து சென்ற அந்த இளைஞர் திரும்பி நடந்து வந்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு வேகமாக ஓடி, ஏற்கனவே தயாராக இரு சக்கர வாகனத்தில் ஏறி இருவரும் மின்னல் வேகத்தில் தப்பித்து சென்றுள்ளனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மூதாட்டியை ஆசுவாசப்படுத்தி விசாரித்த போது அது கவரிங் செயின் என கூறியதால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாந்தோன்றிமலை போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர்.பட்டப்பகலில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

மேலும், இப்பகுதிகளில் இது போன்ற செயின் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள், பகலில் தனியாக வெளியில் செல்வதையும், தனியாக நடந்து அல்லது இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது தங்க நகைகளை அணிவதை தவிர்த்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்