Skip to main content

பல கோடி மதிப்புள்ள திருட்டு சிலையை விற்க முயன்ற இருவர் கைது..!

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

Two arrested for trying to sell stolen idol worth crores

 

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, மாமல்லபுரம் அருகே திருட்டு சிலை விற்கபோவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அப்பகுதியைக் கண்காணித்தபடி வாகன சோதனை நடத்திவந்தனர்.

 
சென்னையை அடுத்த ஈ.சி.ஆர். மாமல்லபுரம் அருகே பகிங்காம் பாலம் அருகே சந்தேகம் படும்படி ஒரு நபர் திரிந்துக் கொண்டிருந்ததை கவனித்த போலீஸ் அவரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் தகவல் அளித்தார். அந்த நபரின் கையில் இருந்த பையை சோதனை செய்த போலீசார் அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னால் ஆன பல கோடி ரூபாய் மதிப்புள்ள ‘பூதேவி’ சாமி சிலையை பறிமுதல் செய்தனர். 

 

விசாரணையில், அவர் செங்கல்பட்டு இந்திரா நகரை சேர்ந்த வேல்குமார் என்றும் மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் இதில் ஈடுபட்ட செல்வம் என்பவரையும் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ஒரு நபரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மூன்றாம் நபரான ஜெஸ்டின் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

கைதானவர்களிடம், சிலை எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்