Published on 20/04/2020 | Edited on 20/04/2020
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களிலும், சாலைகள், தெருக்கள் என அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் செய்துவருகின்றனர். பொதுமக்களும், தன்னார்வலர்களும்கூட தங்கள் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொள்கின்றனர்.
சென்னை, சைதாப்பேட்டை சாமியார் தோட்டம் பகுதியில் தன்னார்வலர்கள் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியில் சென்று திரும்பும்போது கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, அவர்களின் வாகனங்கள் மீது மஞ்சள் கரைசலை ஊற்றி சுத்தம் செய்கின்றனர்.