தமிழகத்தில் நீட் தேர்வு மூலம் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது பொதுமக்களிடமும் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து கருத்து கேட்க முடிவெடுத்துள்ள நிலையில், நீட் தேர்வு விலக்கு குறித்து நேற்று நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார்.
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தவறாமல் நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் அமைந்துள்ள குழுவிடம் தங்களது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியிருந்தார். இந்நிலையில், சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்ற வேண்டும் என அமமுகவின் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''2010 நீட் தேர்வை கொண்டு வந்த தவறுக்கு திமுக பிராயச்சித்தம் தேடிக்கொள்ள வேண்டும். சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்ற வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.