Skip to main content

பெற்ற குழந்தையை துணிப்பையில் போட்டு சுடுகாட்டில் எறிந்த இளம்பெண்.... சிசிடிவியில் சிக்கி கைது!!

Published on 18/10/2018 | Edited on 18/10/2018

சென்னை போரூர் அருகே பிறந்து நான்கு நாளே ஆன பச்சிளம் குழந்தையை சுடுகாட்டில் வீசிவிட்டு சென்ற சம்பவத்தில் குழந்தையை பெற்ற தாயே வீசி சென்றது கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

child

 

சென்னை போரூரில் கடந்த 11-ஆம் தேதி காரம்பாக்கம் சுடுகாட்டில் துணிப்பைக்குள் பிறந்து நான்கு நாட்களே ஆனா குழந்தை ஒன்று தூக்கியெறியப்பட்டு கிடப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து அங்கு வந்த வளசரவாக்கம் போலீசார் குழந்தையை கைப்பற்றி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

 

child

 

விசாரணையில் சிக்கிய சிசிடிவி காட்சியில் இளம்பெண் ஒருவர் துணிப்பையில் குப்பையை கொட்டுவது போன்று சர்வ சாதாரணமாக எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் குழந்தையை சுடுகாட்டில் வீசி எறிந்தது பதிவாகியுள்ளது. மேலும் இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் காதலனால் ஏமாற்றப்பட்டு குழந்தை பெற்ற பெண் அதை மறைக்க பெற்ற குழந்தையை மனிதாபமானமின்றி தூக்கி எறிந்ததை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து குழந்தையை தூக்கி எறிந்த லாவண்யா என்ற பெண்ணை கைது செய்துள்ளனர் போலீசார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மயிலாடுதுறை டூ அரியலூர்? சிறுத்தை நடமாட்டத்தால் குழப்பத்தில் வனத்துறை!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Leopard movement near Ariyalur; Forest department in confusion

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த இரண்டாம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர். அந்தப் பகுதியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு சிறுத்தையைப் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். இத்தகைய சூழலில் சிறுத்தை இடம்பெயர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. அதாவது மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தூரம் இடம் பெயர்ந்த சிறுத்தை குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சுற்றித் திரிவதாகத் தகவல்கள் வெளியானது. இந்தத் தகவலை அடுத்து  வனத்துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டனர். அந்தப் பகுதியில் சுமார் 15 இடங்களில்  தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூண்டுகளும் அமைக்கப்பட்டது. அதோடு கடந்தாண்டு நீலகிரி அருகே உள்ள மசினகுடி பகுதியில் சுற்றித் திரிந்த ஆட்கொல்லி புலியான டி23 புலியைப் பிடிப்பதில் மிகுந்த நேர்த்தியாகச் செயல்பட்ட பொம்மன் மற்றும் காலன் ஆகிய இருவரும் மயிலாடுதுறை பகுதிக்கு வந்தனர். இவர்கள் வனத்துறையுடன் சேர்ந்து சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இத்தகைய சூழலில் மயிலாடுதுறை நல்லத்துக்குடியில் சிறுத்தையைப் பார்த்ததாகத் தொழிலாளி ஒருவர் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்திருந்தார். இந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் தெர்மல் ட்ரோன் உதவியுடன் நேற்று முன்தினம் நள்ளிரவில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறையில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாகச் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறை சார்பில் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் திருவாரூர் மாவட்ட வன அலுவலர் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். 

Leopard movement near Ariyalur; Forest department in confusion

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள மருத்துவமனையில் உள்ள வேலியின் சுவரில் சிறுத்தை ஏறி குதிக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இதன் மூலம் அரியலூர் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களும் சிறுத்தையைப் பார்த்ததாக கூறியுள்ளனர். அதே சமயம் மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தையும், செந்துறையில் தென்பட்ட சிறுத்தையும் ஒன்றா என வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இது குறித்து மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தெரிவிக்கையில், “சிறுத்தை பிடிபட்ட பின்னரே அதன் உடல் அமைப்பை வைத்தே மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தையும், செந்துறையில் தென்பட்ட சிறுத்தையும் ஒன்றா என உறுதிப்ப்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார். அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.