2004 டிசம்பா் 25-ம் தேதி நாடு முமுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முடித்து கொண்டு நள்ளிரவு தூக்கத்தில் இருந்த மீனவ கிராமங்கள் சுனாமி எனும் ஆழிபேரலையின் கோர தாண்டவத்தால் தாக்கப்பட்டது. வான் முட்டும் அளவுக்கு உயா்ந்தெழுந்த கடல் அலை மீனவ கிராமங்களை அடித்து சென்றது. இதில் நாடு முமுவதும் இரண்டரை லட்சம் போ் பலியானார்கள். இது உலகம் முமுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதில் குமரி மாவட்டத்தில் சுனாமி கோரவதாண்டவத்துக்கு 826 போ் பலியானார்கள். குளச்சல், கொட்டில்பாடு, மணக்குடி, கன்னியாகுமரி, அழிக்கால், பிள்ளைத்தோப்பு, ராஜாக்கமங்கலம், இரயுமன்துறை ஆகிய மீனவ கிராமங்கள் முமுமையாக தாக்கப்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் உறவுகளையும் உடமைகளையும் இழந்தனா்.
ஒவ்வொரு மீனவ கிராமங்களிலும் உயிரிழந்தவா்கள் அனைவரும் ஓரே இடத்தில் புதைக்கப்பட்டன. இந்த நிலையில் சுனாமி ஏற்படுத்திய அந்த கோரவ தாண்டவத்தின் துக்கம் 14 ஆவது ஆண்டு இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் கடலுக்கு பால் ஊற்றி பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டன. மேலும் உயிரிழந்தவா்கள் புதைக்கப்பட்ட இடத்தில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டதோடு நினைவஞ்சலி ஊா்வலமும் நடந்தது.
அரசு சார்பில் கன்னியாகுமரியில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி மலரஞ்சலி செலுத்தினார்கள். இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.