லாரி - வேன் நேருக்கு நேர் மோதல்:
ஸ்பெயின் சுற்றுலா பயணிகள் 5 பேர் பலி - 6 பேர் காயம்!
ஸ்பெயின் சுற்றுலா பயணிகள் 5 பேர் பலி - 6 பேர் காயம்!
ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி அருகே கண்டெய்னர் லாரி-வேன் மோதிக்கொண்ட விபத்தில் ஸ்பெயின் சுற்றுலா பயணிகள் 5 பேர் உள்பட 6 பேர் பலியாகினர்.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 7 பேர் இந்தியாவை சுற்றி பார்க்க வந்தனர். இந்தியாவில் பல பகுதியில் சுற்றி பார்த்த அவர்கள் சில நாட்களுக்கு முன் பெங்களூர் வந்தனர். அங்கு தங்களுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை பாண்டிச்சேரி செல்ல திட்டமிட்டனர். அதற்காக 7 பேரும் வேனில் பெங்களூரில் இருந்து பாண்டிச்சேரி செல்ல ஆந்திர மாநிலம், மதனப்பல்லி வழியாக வந்தனர்.
சித்தூர் அருகே மதனப்பள்ளி புங்கனூர் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே வேன் வந்தபோது, அனந்தபூரில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக டெம்போ வேன் மீது மோதியது.
இதில் டெம்போ வேன் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 4 பேரும், டிரைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காயமடைந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 2 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு மதனப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மதனப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- வடிவேல்