Published on 30/10/2022 | Edited on 30/10/2022
முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜைக்கு செல்வோர் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜைக்கு வாகனங்களின் மேற்கூரையில் பயணித்தவாறு சென்ற இளைஞர்களை நிறுத்தி காவல்துறையினர் அறிவுரை வழங்கினர். இதேபோன்று நாமக்கல் மணிக்கூண்டு பகுதியிலும் காரின் மேற்க்கூரையில் சென்ற இளைஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் மருது பாண்டிய சகோதரர்கள் மற்றும் முத்துராமலிங்கத் தேவரின் உருவப் படங்களுக்கு மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் மரியாதைச் செலுத்தினர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.