Skip to main content

வசூல் செய்த பணத்தைப் பிரிப்பதில் வாக்குவாதம்; இளைஞர்களுக்கு வெட்டு!

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

trichy samayapuram temple function srirangam yougesterter involved 

 

கோவில் திருவிழாவிற்காக வசூல் செய்த பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதம் வெட்டுக்குத்து சம்பவத்தில் முடிந்துள்ள நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் பூச்சொரிதல் விழாவுக்கு ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் பணம் வசூல் செய்தனர். பின்னர் அந்தப் பணத்தை பிரிப்பதில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து திருச்சி அம்மா மண்டபம் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த கொக்கரக்கோ என்கிற பிரசாந்த் (வயது 21) மற்றும் அவரது நண்பர்கள் ஹரி விஜய், அசோக், வெங்கடேசன் ஆகியோர் பணத்தை தர மறுத்த ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 23) அதே பகுதியைச் சேர்ந்த மாதவன் (வயது 23) ரெக்ஸ் (வயது 20) ஆகிய மூன்று பேரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

 

இதில் ராஜேஷுக்கு இடது கையிலும், மாதவனுக்கு தலையிலும், ரெக்ஸ் என்கிற ரெட்டிக்கு தோள்பட்டையிலும் வெட்டு விழுந்தது. அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்