Skip to main content

10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்!

Published on 12/08/2021 | Edited on 12/08/2021

 

trichy police seizured and police investigation

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை உள்ளிட்டப் பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்க கூடாது என்று தொடர்ந்து காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தனிப்படை காவலர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பால்பண்ணையில் உள்ள குடோனுக்கு சென்ற காவல்துறையினர், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பான்மசாலா, குட்கா புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

 

மொத்தம் 27 மூட்டைகளில் 550 கிலோ அளவுள்ள குட்கா, பான் மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று காவல்துறையினர் கூறுகின்றன.

 

மேலும் உரிமையாளர் ராஜேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.  இதுபோன்ற தடை செய்யப்பட்டப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்