திருச்சி அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக (Head constable) இருப்பவர் ஹரிஹரன் (40). இவர் நேற்று மதியம் அரியமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது திடீரென நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர் ஹரிஹரனை அரிவாளால் தலை மற்றும் கை ஆகிய இடங்களில் வெட்டினார். ஏட்டு ஹரியின் சத்தத்தை கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் அந்த நபர் ஓடி விட்டார். படுகாயமடைந்த ஹரி சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏட்டு ஹரிஹரன் போலீஸ் யூனிபார்மில் இருக்கும் போது சம்பவம் நடந்துள்ளதால் வெட்டிய நபர் ரவுடியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பட்டப்பகலில் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு விழுந்த விவகாரம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் மீதான தாக்குல் நடத்தியது யார் என்கிற பரபரப்பு அடங்குவற்குள்ளாக இன்று காலை திருவரம்பூர் பகுதியில் உள்ள பிரபல ரவுடி ரஜினி கருப்பை இவர் திருச்சி மாவட்டத்தில் ரவுடி பட்டியலில் 7 வது இடத்தில் இருக்கிறார். இவர் டூவிலரில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று இவரை வெட்டி சாய்த்து உய்யகுண்டான் கால்வாயில் வீசி சென்று உள்ளது. திருச்சியில் பல்வேறு பஞ்சாயத்து, ரியல்எஸ்டேட் பிரச்சனை என்று ஏகப்பட்ட பஞ்சாயத்துகளில் அடிப்பட்ட ரஜினிகருப்பையாவை வெட்டியது யார் என்பது தற்போது வரை புரியாத புதிராக உள்ளது. திருச்சியில் அடுத்தடுத்த நாளில் போலீஸ் மீது தாக்குதல், அடுத்த நாள் ரவுடி வெட்டி சாய்ப்பு என அடுத்த க்ரைம் ரேட் எகிறி கொண்டிருக்கிறது. போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.