Skip to main content

'ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நடவேண்டும்'- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

trees madurai high court branch national highway authority of india

 

சாலை விரிவாக்கத்திற்காக 1.78 லட்சம் மரங்களை தேசிய நெடுஞ்சாலைத்துறை வெட்டியதாக ஆனந்த முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு இன்று (24/09/2020) விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவுபடி, ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவில்லை எனில் சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்ட வேண்டாம். சென்னை- மதுரை நெடுஞசாலையில் சாலை விரிவாக்கத்திற்கு வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு? வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக எத்தனை மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, நவம்பர் 5- ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்