Skip to main content

'மாட்டு வண்டி பயணம்..மனைவியை தூக்கி வந்த கணவன்'- பண்பாட்டு முறைப்படி பட்டையை கிளப்பிய திருமணம்!

Published on 09/12/2019 | Edited on 09/12/2019

திருமண முறைகள் மாறிப் போன இந்த காலத்தில் பழங்கால பண்பாட்டை நினைவு படுத்தும் விதமாக ஈரோட்டில் ஒரு திருமணம் நடைபெற்றது. 

எடப்பாடி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்-வனஜா தம்பதியினரின் மகன் ஜெயக்குமார். இவர் தனியார் துறையில் பனியாற்றி வருகிறார். கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி-பூங்கோதையின் மகள் வனஜா. இவர்களின் திருமணம் இன்று காலை கோபிசெட்டிபாளையம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 

 Traditional wedding ceremony



பிறகு மாலை மணமகள் வீட்டுக்கு மணமக்கள் புறப்பட்டனர். இப்போதெல்லாம் புது மணமக்கள் புத்தம் புதிய சொகுசு கார்களில் பயணம் செய்வது வழக்கமாக இருந்தாலும் பாராம்பரிய முறைப்படி இந்த மணமக்கள் இரட்டைமாட்டு வண்டியில் மணமகள் வீட்டுக்கு பயணமானார்கள். 

 

 Traditional wedding ceremony



அதே போல மனமகளின் தாய் வீடு வந்ததும் மனமகன், தனது மனைவியை மாட்டு வண்டியிலிந்து கைகளால் தூக்கி வந்து தாய் வீட்டில் இறக்கினார். இந்த செயல் அந்தப் பகுதி கிராம மக்களை ஆச்சரியப்படுத்தியதோடு இளைய தலைமுறைக்கு பழைய பண்பாட்டு முறையை எடுத்துக் காட்டியதாக அமைந்தது.
 

சார்ந்த செய்திகள்