வேலூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், நாய்க்கனேரி கிராமம் செல்லும் காட்டு வழி பாதையில் டிராக்டர் ஒன்று இன்று மாலை 4 மணிக்கு ஹாலோ பிரிக்ஸ் கற்கள் மற்றும் சிமெண்ட் மூட்டைகளை நாய்க்கனேரி கிராமத்திற்கு ஏற்றி சென்றுக்கொண்டு இருந்தது.
மலைப்பாதையில் செல்லும் போது மேட்டு பகுதியில் டிராக்டரின் பின்பக்கம் பாரம் அதிகமாக இருந்ததால் பாரம் தாங்காமல் முன்பகுதி என்ஜின் தூக்கியதில் டிராக்டரின் பாடியில் இருந்த கற்கள், சிமெண்ட் மூட்டைகள் கீழே சரிந்து விபத்து ஏற்பட்டது.
இதில் பயணம் செய்த நாய்க்கனேரி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் பொன்னுசாமி மற்றும் சீக்க சொனை கிராமத்தைச் சேர்ந்த பெரியபையன் மகன் சிங்காரம் என்ற இரண்டு நபர்களும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.மேலும் நாய்க்கனேரி கிராமத்தை சேர்ந்த சின்னசாமி, பட்டு மற்றும் உமாபதி ஆகிய மூன்று நபர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்பூர் கிராமிய போலிஸார் சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய டிராக்டர் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது. இது தொடர்பாக விபத்தில் சிக்கி மருத்துவமனையில் உள்ள ஓட்டுநர் உமாபதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.