இந்தியா முழுவதும் மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைப்பெறவுள்ளது . இந்நிலையில் முதற்கட்ட தேர்தல் ஆந்திரப்பிரதேசம் (25), அருணாச்சலப்பிரதேசம் (2), அசாம் (5), பீஹார் (4), சத்தீஸ்கர் (1), ஜம்மு மற்றும் காஷ்மீர் (2), மஹாராஷ்ட்ரா (7), மணிப்பூர் (1), மேகாலயா (2), மிசோரம் (1), நாகலாந்து (1) ஒடிஷா (4), சிக்கிம் (1) , தெலங்கானா (17), திரிபுரா (1), உத்தரப்பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5) , மேற்கு வங்கம் (2) , அந்தமான் (1), லட்சத்தீவு (1) உள்ளிட்ட 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது . மேலும் இதற்கான பிரச்சாரம் நாளை (09/04/2019) மாலை 5.00 மணியுடன் முடிவடைகிறது . இந்தியா முழுவதும் பதிவான வாக்குகள் மே - 23 தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியீடுகிறது தேர்தல் ஆணையம். இதனால் தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர் .
அதே சமயம் மக்களவை தேர்தலுக்கான பாதுக்காப்பு பணியை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது . எனவே அரசியல் கட்சிகள் நாளை மாலை முதல் தேர்தல் முடியும் வரை தொலைக்காட்சியிலோ அல்லது செய்தித்தாள்களிலோ பிரச்சாரம் சமந்தப்பட்ட விளம்பரங்கள் மற்றும் கட்சி சமந்தப்பட்ட விளம்பரங்கள் , தேர்தல் கருத்து கணிப்பு தொடர்பாக எந்த வித விளம்பரங்களையும் வெளியீட கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
பி.சந்தோஷ் , சேலம் .