டி.டி.வி. தினகரனுடன் நடிகர் விஷால் சந்திப்பு
அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை இன்று நடிகர் விஷால் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடிகர் விஷால், தினகரனை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரித்தபோது, விஷால் தனது சகோதரியின் திருமண அழைப்பிதழை அளிப்பதற்காக தினகரனை சந்தித்ததாக கூறப்படுகிறது.