இந்தியா முழுவதும் மே 26 ஆம் தேதி இரவோடு தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டது என இந்திய தேர்தல் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் 27 ஆம் தேதி முதல் வழக்கமான அரசுப்பணிகளை மக்கள் பிரிதிநிதிகள் தொடங்கின. இந்த அறிவிப்பு மே 26 ஆம் தேதி மாலை மக்கள் மத்தியில் மீடியாக்கள் கொண்டும் போய் சேர்த்தன் விளைவு, மே 27 ஆம் தேதி திங்கட்கிழமை மனுநீதி நாள் முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் தங்களது குறைகளைக் கூறி மனுக்களை தர திரண்டு வந்திருந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் மனுநீதி நாள் முகாமிற்கு 520 மனுக்கள் வந்தியிருந்தது என்பது குறிப்பிடதக்கது. அதில் தொழில் செய்ய கடனுதவி வேண்டும், முதியோர், விதவை உதவித்தொகை வேண்டும், ஊனமுற்றோர் உதவித்தொகை வேண்டும் என்கிற மனுக்களே அதிகம் இருந்தன.
கடந்த மார்ச் இரண்டாவது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் பொதுமக்களிடம் கோரிக்கை மனு வாங்குவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக உதவி வேண்டும் என மனு தந்த சிலருக்கு தற்போது நலத்திட்ட உதவிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழங்கினார். அதன்படி மாற்று திறனாளிகள் 7 பேருக்கு, ரூபாய் 34,000 மதிப்பில் மூன்று சக்கர நாற்காலிகள், சிறப்பு நாற்காலிகள் போன்றவை வழங்கப்பட்டன.
கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வந்த மனுக்களை விட இது குறைவு என்றாலும், தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட மறுநாள் நடைபெற்ற கூட்டத்திற்கே இவ்வளவு பேர் வருவார்கள் என அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை. இதனால் மனுக்களை பதிவு செய்யும் இடத்தில் அதிகாரிகள் திணறிவிட்டார்கள். அதே நேரத்தில் வேலூர் மாவட்டத்தில் குறைந்த அளவில் மக்கள் வந்து மனுக்களை தந்திருந்தனர். மாவட்ட நிர்வாகம் 472 மனுக்கள் மட்டுமே பெறப்பட்டதாக தெரிவித்துள்ளது.