திருப்பாலைக்குடி அருகே தீ வைத்து வாலிபர் தற்கொலை
திருவாடானை தாலுகா திருப்பாலைக்குடி அருகே வாலிபர் உடலில் தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார். திருவாடானை தாலுகா திருப்பாலைக்குடி மஸ்தான் காலணியைச் சேர்ந்த நலன் (24) இவர் மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர் இதில் மணமுடைநதவர் 6ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதநிலையில் தானே உடலில் தீ வைத்துக் கொண்டார். இதில் காயம்பட்டவரை ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து அவரது தாயார் காளியம்மாள்(45) கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
-பாலாஜி