கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம், நாடு முழுவதும் ரயில் சேவையை நிறுத்தியது இந்திய ரயில்வே வாரியம். சில மாதங்களுக்குப் பின்னர் படிப்படியாக ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில் தெற்கு ரயில்வே ஜனவரி 2-ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் விழுப்புரத்திலிருந்து திருப்பதி இடையிலான ரயில் சேவையைத் தொடங்குவதாக அறிவித்திருந்தது.
அதன்படி, 'தினசரி காலை 04.00 மணிக்கு விழுப்புரத்தில் புறப்படும் ரயில் மாலை 12.00 மணிக்குத் திருப்பதிக்கு சென்றடையும். அதேபோல் மதியம் 02.00 மணியளவில் திருப்பதியில் இருந்து புறப்படும் ரயில் இரவு விழுப்புரம் சென்றடையும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று (06.01.2021) முதல் இந்த சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது, இந்த இரயிலில் 9 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ரயில் விழுப்புரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளுர், கண்ணமங்களம், வேலூர், சித்தூர், திருப்பதி என சுமார் 18 இடங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடதக்கது.