தொட்டியம் அருகே உள்ள கமலாபுரத்தை சேர்ந்தவர் பிரபு. இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2012ம் ஆண்டு ஜீலை மாதம் 6ம் தேதி இரவு தனது சொந்த ஊர் செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கிறார். அப்போது இரண்டு பெண் போலிஸ் ஏட்டுக்கள் வந்தனர். அவர்கள் பிரபுவிடம் விசாரித்து கொண்டிருந்தனர்.
அப்போது விரிவுரையாளர் பெண் போலிசாரின் விசாரணைக்கு பதில் சொல்ல திடீர் என பெண் போலிஸ் “என்ன உட்கார்ந்து கொண்டே பதில் சொல்ற, எழுந்து நிற்க மாட்டியா?” என லத்தியால் அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் பின் அங்கே ரோந்து பணியில் இருந்த அந்த ஏரியா எஸ்.ஐ. பால்ராஜ்யை வரவழைத்து பொதுமக்கள் முன்னிலையில் பயங்கரமாக தாக்கி அவர் மீது ஈவ்டீசிங் வழக்கு பதிவு செய்து அனுப்பி இருக்கிறார்கள்.
சம்மந்தம் இல்லாமல் தான் தாக்கப்பட்டதால் கடும் மன உளைச்சக்கு ஆளானார் விரிவுரையாளர் பிரபு. பின்னர் நடந்தது விஷயங்கள் அனைத்தையும் மனம் நொந்து போய் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு புகார் அளித்தார். இது குறித்து முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டு இருந்தது.
மாநகர காவல் துணை ஆணையர் அளித்த விசாரணை அறிக்கையில் அதிருப்தி அடைந்த மனித உரிமை ஆணையம் தானே முன் வந்து நேரடியாக விசாரணை செய்தது.
விசாரணையில் முடிவில் விரிவுரையாளர் பிரபுக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அந்த தொகையை பிரபுவை தாக்கிய பெண் ஏட்டுக்கள் உமாமகேஸ்வரி, ஹேமலதா, வழக்கு பதிவு செய்த அப்போதைய எஸ்.ஐ. பால்ராஜ் ஆகியோரிடம் இருந்து தலா 10,000 ரூபாய் வீதம் வசூல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையர் (பொறுப்பு) ஜெயந்திரன் உத்தரவிட்டார்.
போலி வழக்கு தொடர்பாக திருச்சி போலிசாருக்கு 30,000 ரூபாய் அபராதம் கட்டுமாறு தண்டனை கொடுக்கப்பட்டது, போலிசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.