பொதுமக்கள் தண்ணீரைக் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்:
அமைச்சர் வேலுமணி பேச்சு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா கோவையில் நடத்துவதும் குறித்தும், கோவை மாநகரத்திற்க்கு குடிநீரைக் எப்படி சீராக வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் வேலுமணி மற்றும் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவையில் உள்ள சட்டமன்ற, நாடளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி,
ஜெயலிதாவின் அரசு மக்களுக்கான எல்லா திட்டங்களையும் சிறப்பாக செய்து கொண்டு வருவதாகவும் வருகின்ற டிசம்பர் 3 - ஆம் தேதி கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மழை வந்து அணைகள் நிரம்பி கொண்டு இருக்கின்ற இந்த வேலையில் மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் வீடுகளுக்கு கொண்டு போய் சேர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கபடும் எனவும் வறட்சியான சூழலில் பொதுமக்கள் பொறுமையுடன் எங்களுக்கு ஒத்துழைப்பு நல்கினார்கள் அவர்களுக்கு அரசு சார்பில் நன்றியைக் தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக சிறுவானி பகுதியில் உள்ள மக்களுக்கு இனி 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சீராக வழங்கப்படும் எனவும் இன்றிலிருந்து கோவை மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மக்கள் தண்ணீரைக் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
-அருள்