Skip to main content

மதுகுடிக்க பணம் கேட்டு கடைகாரரை மிரட்டிய மூன்று சிறுவர்கள் கைது..!

Published on 27/08/2017 | Edited on 27/08/2017
மதுகுடிக்க பணம் கேட்டு கடைகாரரை
மிரட்டிய மூன்று சிறுவர்கள் கைது..!

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகரிலுள்ள கே.சி.தெருவில் வசித்து வருபவர் பாஷாராம் வயது-(28) இவர் அந்த பகுதியில் புத்தகம் மற்றும் எழுது பொருள்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அவருடைய கடைக்கு வந்த மூன்று பேர் தங்களுக்கு மதுக்குடிக்கவும், செலவுக்கும் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதற்கு பாஷா ராம் பணம் தர முடியாது என்று சொல்லியுள்ளார்.

இதையடுத்து அந்த மூவரும், கடையிலிருந்த கண்ணாடி பொருட்களை கீழே தூக்கிப்போட்டு உடைத்துவிட்டு, கத்தியை காட்டி மிரட்டி பாஷாராம் அகதியில் இருந்த பணம் 600 ரூபாயை பறித்துகொண்டு அங்கிருந்து  சென்றனர்.

நேற்று காலையில் இது குறித்து பாஷாராம் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ஆய்வாளர் சிவசெந்தில்குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், நாமக்கலில் உள்ள நடராஜபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்த, 18-வயது வாலிபரும்,  வண்டிக்கார தெருவை சேர்ந்த 17-வயது வாலிபரும், கங்காணித் தெருவை சேர்ந்த 14 வயது சிறுவனும் சேர்ந்து இந்த பணப்பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரையும் கைது செய்துள்ள போலீசார், நாமக்கல் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இதையடுத்து அவர்களை வரும் செப்டம்பர் எட்டாம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நடுவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, இளைஞர்கள் இருவரும் பரமத்தி வேலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும், சிறுவனை சேலத்தில் உள்ள சிறுவர்கள் கூர் நோக்கு இல்லத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

-பெ.சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்