Published on 19/07/2020 | Edited on 20/07/2020
சென்னை கோயம்பேடு, கரோனா பாதிப்பு ஹாட்ஸ்பார்ட்டாக மாறியதை அடுத்து திருவள்ளூர், திருமழிசையில் தற்காலிக சந்தை உருவாக்கப்பட்டது. அண்மை நாட்களாக மழை பொழிந்ததால் தற்பொழுது இந்தச் சந்தைப் பகுதி சேறும் சகதியுமாக இருப்பதாகவும், மழையால் சேறும் சகதியுமாக மாறிய நிலையில் சந்தையைக் கோயம்பேடுக்கு மாற்றக்கோரி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்பொழுது போராட்டம் நடத்தும் வியாபாரிகளுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 30 நிமிடங்களாக இந்தப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. திருமழிசை சந்தையில் காய்கறிகள் வாங்க வந்த சிறு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் வாகனங்களை உள்ளே அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் வியாபாரிகள் முன்வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.