Skip to main content

"சொத்து விவரப் பட்டியலை வெளியிட தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்"- திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் பேட்டி...

Published on 10/01/2021 | Edited on 10/01/2021

 

thiruthondar sabha president press meet at trichy

'தமிழ்நாடு அனைத்து சிவ தொண்டர்கள் கூட்டமைப்பு' சார்பில் இன்று (10/01/2021) திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு உட்பட்ட சிவ தொண்டர்கள் கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. சிவ தொண்டர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டார். 

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், "இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் பத்து லட்சம் ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட அத்துறை சார்ந்த அதிகாரிகள் அவற்றை ஆக்கிரமித்து அவற்றின் மூலம் பெரிய அளவில் பொருளீட்டும், மிகப்பெரிய ஊழலைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

 

ஊழல் செய்யக் கூடிய, இந்த துறையில் இருக்கக் கூடிய, ஒவ்வொரு அலுவலர்களையும் அவர்களுடைய சொத்து விவரப் பட்டியலை வெளியிட தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும் இவர்களை கைது செய்தால் தமிழகம் முழுவதும் சிறைச்சாலைகள் வைப்பதற்கு இடமில்லாமல் போகும் அளவிற்கு இவர்களுடைய ஊழல் பட்டியல் நீண்டுக் கொண்டே இருக்கிறது.

 

ஊழல் செய்யும் துறைகளுக்கான ஓட்டப்பந்தயத்தில் அறநிலைத்துறை எப்போதும் முதலிடத்தைப் பெறும். எனவே, இது தொடர்பான வழக்குகள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் விரைவில் முடிவு பெற்று அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில் இடங்களை விரைவில் மீட்போம்.

 

வருகின்ற தேர்தலில் எந்த கட்சியும் சார்ந்து நாங்கள் செயல்பட போவதில்லை. தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள். எனவே இந்தத் தேர்தலில் இந்துக்கள் பெயரைத் தொடர்ந்து மிக மோசமாகவும், மிக கேவலமாகவும் பயன்படுத்தி வரக்கூடிய எல்லா கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள், வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களை டெபாசிட்டை இலக்க செய்வோம்" என்றார். 

 

சார்ந்த செய்திகள்