திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து!
சென்னை மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடத்தியதற்காக மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி உள்ளிட்ட 4 பேர் மே -21ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
மே -22ம் தேதி அன்று திருமுருகன்காந்தி, டைசன், இளமாறன், அருண் உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
குண்டர் சட்டத்தை எதிர்த்து திருமுருகன்காந்தி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.