Published on 26/05/2020 | Edited on 26/05/2020
சென்னையை அடுத்த திருமழிசையில் தற்காலிக காய்கறி மொத்த மார்க்கெட்டில் பணியாற்றும் பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு சீருடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காய்கறிக்கடை பணியாளர்களுக்கு நீல நிறம், தொழிலாளர்களுக்கு பச்சை நிற சீருடை அணிந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் சீருடை அணியாத பணியாளர், தொழிலாளர்கள் போலீசாரால் வெளியேற்றப்படுவர் என்றும், சீருடை அணியாவிடில் கடை உரிமையாளருக்கு அபராதம் என கோயம்பேடு அங்காடி நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.
இதனிடையே திருமழிசை காய்கறி மார்க்கெட்டில் பணியாற்றி போக்குவரத்து தலைமை காவலருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கரோனா பரவியதால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு தற்காலிகமாக திருமழிசையில் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.