நாட்டிலுள்ள 125 கோடி மக்களின் பாதுகாப்பு எழுத்துரிமை, பேச்சுரிமை கொண்ட து அரசியலைப்பு சட்டம் தான். இந்த அரசியலைப்பு சட்டத்திற்கு எதிராக மோடி அரசு செயல்படுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கடுமையாக சாடினார் .
அரசியல் அமைப்பு சட்டத்தை காப்போம் இந்திய நாட்டை பாதுகாப்போம் என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரம் பயணம் வேதாரண்யத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் 6 குழுக்களாக சென்று வருகிற செப்டம்பர் 23ம் தேதி திருப்பூரில் பொதுக் கூட்டத்துடன் நிறைவடைகிறது.
இந்த பிரச்சார இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் திருவாரூர் வந்தடைந்தது. பின்னர் திருவாரூர் கீழவீதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு முத்தரசன் பேசுகையில், "இந்திய நாட்டிலுள்ள 125 கோடி மக்களின் பாதுகாப்பு எழுத்துரிமை, பேச்சுரிமை கொண்டது அரசியலைப்பு சட்டம் தான். இந்த அரசியலைப்பு சட்டத்திற்கு எதிராக மோடி அரசு செயல்படுகிறது. குறிப்பாக வகுப்புவாதத்திற்கு எதிராக பேசுபவர்கள் தண்டிக்கப்படுவதில்லை கொலை
செய்யப்படுகின்றனர். எனவே மத்திய அரசு கடுமையான அடக்கு முறையை கையாளுகிறது, நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது, நாடு பாசிசத்தை நோக்கி நாடு நகர்ந்து கொண்டு இருக்கிறது
இதே போன்று எடப்பாடி அரசு லாயக்கற்ற அரசாக உள்ளது. ஒரு முறைக்கு நான்கு முறை மேட்டூர் அணை நிரம்பியும் கடை மடைக்கு தண்ணீர் வரவில்லை. கீழ்மட்டம் முதல் தலைமை செயலகம் அதாவது மேல்மட்டம் வரை ஊழல் தலை விரித்தாடுகிறது. இந்த இரண்டு அரசுகளும் அகற்றப்படவேண்டும் அதற்கான முயற்சிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டு வருகிறது." என்றுபேசிமுடித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் தந்தை பெரியாரின் சிலையை அவமதிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது.
அவமதித்தவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
காவிரி டெல்டா கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் சென்றுவிட்டது என அமைச்சர்கள் கூறுகிறார். ஆனால் சத்தியமாக தண்ணீர் செல்லவில்லை சம்பாபயிர்கள் கருகி கொண்டிருக்கிறது என்பதே உண்மை. கருகும் சம்பா பயிர்களை காப்பாற்ற தமிழக அரசு கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விநாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் மத கலவரங்களை பிஜேபி அரசு உருவாக்கி வருகிறது. வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் எச் ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும்". என முத்தரசன் கூறியுள்ளார்.