Published on 05/04/2018 | Edited on 05/04/2018
காவல்துறையில் பணிபுரிபவர்களின் வாரிசுகளுக்கு குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச்சேர்ந்த கே.சதீஷ் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த உத்தரவில், காவல்துறை பணி நியமனத்தில் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு தருவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அனைத்து குடிமகன்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். சாதி ரீதியான இட ஒதுக்கீடு வழங்குவது தவறு இல்லை என்று ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.