Published on 08/04/2022 | Edited on 08/04/2022
சென்னை ரிப்பன் மாளிகை அருகே உள்ள சிக்கனலில் பெரியமேடு போக்குவரத்து காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்து விதிமுறைகளை அறிவிப்பது வழக்கம். அந்த வழக்கத்தில் கூடுதல் இடம் பிடித்துள்ளது இளையராஜாவின் இசை.
பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுமார் நான்கு மணி நேரம் இளையராஜாவின் இசை ஒலிக்க வைக்கப்படுகிறது. மன அழுத்தத்துடன் வரும் வாகனஓட்டிகளுக்கு ஒலிக்கப்படும் இசையானது புத்துணர்ச்சியைத் தரும் அதேநேரத்தில் கூடவே ஒலிக்கப்படும் போக்குவரத்து நெறிமுறை தொடர்பான அறிவிப்புகள் எளிதாக வாகன ஓட்டிகளைக் கூர்ந்து கவனிக்க வைப்பதாக போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 'தென்மதுரை வைகை நதி..., இளைய நிலா பொழிகிறதே...' என இளையராஜாவின் இசையும் போக்குவரத்து நெறிப்படுத்தக் கைகோர்த்துள்ளது போக்குவரத்து காவல்துறையின் முயற்சியால்.