Skip to main content

ஆட்சிக்கு வந்ததும் ஜெ. மரணத்திற்கு யார் காரணம் என்பதை முதலில் கண்டு பிடிப்போம்! ஸ்டாலின் பேச்சு!!

Published on 16/02/2019 | Edited on 16/02/2019
s

 

தேனி மாவட்டத்தில் உள்ள வடபுதுபட்டியில் தி.மு.க சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது.   இக் கூட்டத்திற்கு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு கிராம மக்களுடன் கலந்துரையாடினார். அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். 
அப்போது பேசிய ஸ்டாலின்,    ‘’மார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும், ஏப்ரலில் தேர்தல் முடிந்துவிடும். தேர்தல் வந்தால் நாங்கள் கை காட்டும் ஆட்சி தான். தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் வந்துவிடாதா என்று மக்கள் ஏக்கத்தோடு இருக்கிறார்கள். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, மக்களுக்கு திமுக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

 

 முல்லைப்பெரியாறு அணைக்கு எவ்வளவு ஆபத்துகள் வந்தது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். அதனை எதிர்கொண்டவர் கலைஞர் என்று பேசினார். 

 

அதனைத்தொடர்ந்து ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட  அழகாபுரி கிராமத்திலிருந்து வந்திருந்த பெண்கள் பேசும் போது...அரசு பஸ் வசதி வேண்டும் என்றும் கழிப்பிட வசதி வேண்டும் என்றும் கோரினர். மேலும், படித்த இளைஞர்கள் வேலைஇல்லாமல் இருப்பதாகவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் தெரிவித்தனர். 

 

s

 

அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பேசும் போது, கிராம பெண்கள் கழிப்பிட வசதி இல்லாமல் சிரமப்படுவதாக தெரிவித்தார். அம்மாபுரம் கிராம பெண்கள் கூறும் போது, பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் எங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை என்றும், இரண்டு கிலோமீட்டர் நடத்து வடபுதுபட்டிக்கு வந்து தான் பஸ் ஏறுவதாகவும் கூறினர். அடுத்ததாக டாஸ்மார்க் கடையை தி.மு.க மூடும் என்று சொன்னது. அ.தி.மு.க படிப்படியாக மூடுவோம் என்று சொல்லி தற்போது டாஸ்மார்க் கடையை திறந்துகொண்டிருக்கிறார்கள் என்று கூறினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், நாங்கள் மூடுவோம் என்று சொன்னோம்  ஆனா நீங்க ஓட்டு போடலையே என்றார்.

 

   தொடர்ந்து பேசிய ஸ்டாலினோ..... தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்கவில்லை. மக்கள் பிரநிதிதி இருந்திருந்தால் அனைத்தும் செய்திருக்கலாம். மேலும் ஒரு வருடம் இங்கே எம்.எல்.ஏ இல்லை. உங்கள் குறைகளைச் சொல்ல யாரும் இல்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தலை நடத்திமுடித்துவிடுவோம். முதியோர் உதவித்தொகை திட்டத்திற்கான பிரச்சனை இங்குமட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் உள்ளது. தற்போது ஆளும் கட்சி சார்ந்தவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதனால் 60% பேர் உதவித்தொகை பெறமுடியவில்லை. 

சசிகலா, தினகரன், எடப்பாடி ஆகியோர் கொள்ளையடித்தது சம்மந்தமான ஆவணங்கள் கொடநாட்டில் வைத்திருந்தார் ஜெயலலிதா. அதனை கொள்ளையடிக்க தான் அந்த கொலைகள் நடந்தன. ஊழல் செய்துவிட்டு சிறைக்கு செல்வது ஒரு விதம். கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்லும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கப்போகிறார். தேர்தல் வருகிறது என்பதால் தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் வழங்குவதாக அ.தி.மு.க அறிவித்துள்ளது. இனிமேல் ஆட்சிக்கு வரமுடியாது என்பதால் தான் எடப்பாடி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார். பதவி கிடைக்கும் வரை ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்றார் ஓ.பி.எஸ்.! பதவி கிடைத்ததும் ஜெயலலிதா மரணத்தை பற்றி பேசவில்லை. முதல்வராக இருந்தபோது தான் அண்ணா மறைந்தார். இரண்டு மாதம் மருத்துவமனையில் இருந்தார். ஒவ்வொரு நாளும் அவரது உடல்நிலை பற்றி செய்தி சொல்வோம். காலையில் ஒருமுறை, மாலை ஒருமுறை. அதே போல் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது செய்தி சொல்லியிருக்க வேண்டுமா அல்லவா? தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஜெயலலிதா மரணத்திற்கு யார்? காரணம் என்பதை கண்டுபிடிப்போம் என்று கூறினார்.   இக் கூட்டத்தில், கழகத் துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி, தேனி மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கம்பம் இராமகிருஷ்ணன், கம்பம் செல்வேந்திரன் மற்றும் மாவட்டம் ஒன்றியம் நகரம் என பொறுப்பில் உள்ள உ.பி.களும் பலர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்