Skip to main content

"எனக்கு சமமா உக்காந்து பீடி குடிக்கிறியா?" - ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிய இளைஞர்!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

THENI DISTRICT INCIDENT  POLICE INVESTIGATION

 

சமமாக அமர்ந்து பீடி குடித்த பட்டியல் இனத்தவரை அரிவாளால் வெட்டிய இளைஞரை தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

 

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன். விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் அப்பகுதியில் அமர்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் வசித்து வரும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரும் அமர்ந்து புகைபிடித்துள்ளார். இதனைக் கணடு ஆத்திரமடைந்த அலெக்ஸ் பாண்டியன், 'எனக்குச் சமமாக அமர்ந்து நீயும் புகைபிடிப்பதா?' எனச் சாதியின் பெயரைச் சொல்லித் திட்டி அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த பழனிச்சாமி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இது குறித்து விசாரணை நடத்திய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ், அலெக்ஸ் பாண்டியன் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, பழனி செட்டிப்பட்டி காவல்துறையினர், அவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அலெக்ஸ் பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்