Skip to main content

தொகுதி அறிவோம்... தஞ்சாவூர்!

Published on 17/03/2019 | Edited on 18/03/2019

17 வது மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு பரபரப்பான சூழ்நிலையில் தொகுதி பங்கீடுகள் முடிந்து வேட்பாளர்கள் அறிவிப்புகளும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் தொகுதியை பற்றி அறிந்து கொள்வோம். 

 

தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) ஆகிய 6 சட்டமன்றத் தொகுதியில் அடங்கும். 

 

மொத்த வாக்காளர்கள் விபரம்: ஆண்: 7,02,396, பெண்: 7,37,276, பிற: 96

 

thanjavur

 

சட்டமன்ற தொகுதிவாரியாக.. 

தஞ்சாவூர் – ஆண்: 1,30,852

பெண்: 1,40,892

மூன்றாம் பாலினத்தவர்கள்: 55

 

திருவையாறு – ஆண்: 1,24,713

பெண்: 1,28,991

மூன்றாம் பாலினத்தவர்கள்: 4

 

ஒரத்தநாடு – ஆண்: 1,12,244

பெண்: 1,16,635

மூன்றாம் பாலினத்தவர்கள்: 5

 

பட்டுக்கோட்டை – ஆண்:1,11,419

பெண்: 1,20,049

மூன்றாம் பாலினத்தவர்கள்: 21

 

பேராவூரணி – ஆண்: 1,03,450

பெண்: 1,05,929

மூன்றாம் பாலினத்தவர்கள்: 6

 

மன்னார்குடி – ஆண்: 1,19,718

பெண்: 1,24,780

மூன்றாம் பாலினத்தவர்கள்: 5

 

 

இதுவரை வென்றவர்கள்....

 

1952 - ஆர். வெங்கட்ராமன் (காங்கிரஸ்)

1957 - ஆர். வெங்கட்ராமன் (காங்கிரஸ்)

1957 (இடைத்தேர்தல்) - ஏ.வி. சேர்வை (காங்கிரஸ்)

1962 - வி. வைரவ தேவர் (காங்கிரஸ்)

1967 - எஸ்.டி. சோமசுந்தரம் (திமுக)

1971 - எஸ்.டி. சோமசுந்தரம் (திமுக)

1977 - எஸ்.டி. சோமசுந்தரம் (அதிமுக)

1979 (இடைத்தேர்தல்) - எஸ். சிங்காரவடிவேல் (காங்கிரஸ்)

1980 - எஸ். சிங்காரவடிவேல் (காங்கிரஸ்)

1984 - எஸ். சிங்காரவடிவேல் (காங்கிரஸ்)

1989 - எஸ். சிங்காரவடிவேல் (காங்கிரஸ்)

1991 - கே. துளசிஅய்யா வாண்டையார் (காங்கிரஸ்)

1996 - எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (திமுக)

1998 - எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (திமுக)

1999 - எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (திமுக)

2004 - எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (திமுக)

2009 - எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (திமுக)

2014-   கு. பரசுராமன் (அதிமுக)

 

இந்தத் தொகுதியில் 1952 முதல் 2014ம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 9 முறையும், திமுக -7 முறையும், அதிமுக இரண்டு முறையும் வென்றுள்ளன.  இந்தத் தொகுதியில் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 4 முறை வென்றதுள்ளது. பின்னர் இரு தேர்தல்களில் திமுகவும், ஒரு தேர்தலில் அதிமுகவும் வெற்றி பெற்றது. இதையடுத்து, மீண்டும் இந்தத் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றி தொடர்ந்து 4 முறை வென்றது. பின்னர், இத்தொகுதி 1996 ம் ஆண்டு முதல் தொடர்ந்து திமுக வசம் உள்ளது. மீண்டும் 2014ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.,க வென்றது. தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்ற தி.மு.க பழனிமாணிக்கம் மத்திய இணை அமைச்சராகவும் இருந்தார். 

 

2014 ல் தேர்தலில் தஞ்சாவூர் லோக்சபா தொகுதி 

கட்சிகள் ஒட்டுக்கள்: 

கட்சிகள்:                                                  ஒட்டுக்கள்:

பரசுராமன்(அ.தி.மு.க.,)                        5,10,307  ( வெற்றி )

 

டி.ஆர்.பாலு(தி.மு.க.,)                           3,66,188 

கருப்பு முருகானந்தம் (பா.ஜ.,)             58,521 

கிருஷ்ணசாமி வாண்டையார்(காங்.,)   30,232 

தமிழ்செல்வி (மார்க்சிஸ்ட்)                  23,215

 

இந்த நிலையில் தான் தற்போதைய தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க உறுப்பினர் இருந்தாலும் மீண்டும் போட்டியிட தயக்கம் காட்டியதால் கூட்டணியில் த.மா.க வுக்கு ஒதுக்கி விட்டனர். விருப்பமில்லாமல் அந்த தொகுதியை பெற்றுள்ளனர் த.மா.கா வினர். அதே நேரத்தில் தி.மு.க வுக்கு மீண்டும் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதில் ஏக மகிழ்ச்சியில் உள்ளனர் உடன்பிறப்புகள்.

 

ஏன் அ.தி.மு.க தொகுதியை கொடுத்த்து என்றால்.. கஜா புயல் பாதிப்பு எங்களையும் பாதிக்கும் என்கிறார்கள் ர.ர.க்கள். அதே நேரத்தில் வாசனும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கஜா புயலின் போது பேசினார். இப்பொழுது  அதே கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஓட்டுக் கேட்கப் போகிறார் என்று சிரிக்கின்றனர்.

 

ஆனால் தி.மு.க வோ.. எங்களுக்கு மக்களிடம் போக பயமில்லை. கஜா பாதிப்பும், ஹைட்ரோ கார்ப்பன் பிரச்சனையிலும் மக்களுடன் நின்றது எங்களுக்கு துணையாக இருக்கும் என்கின்றனர்.

 

அ.ம.மு.க வோ.. இரு கட்சிகளும் இந்த தொகுதியில் ஏற்கனவே இருந்தவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்ற கேள்வியோடு மக்களை சந்திப்போம் என்கிறார்கள். மொத்தத்தில் மும்முனைப் போட்டி தான்.

 

சார்ந்த செய்திகள்