Skip to main content

படிப்போடு சேர்ந்து விளையாடினால் வேலை நிச்சயம்.. அடித்துச் சொல்கிறார் தங்கமகள் அனுராதா

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

 

    ஆஸ்திரேலியாவில் சமோவா தீவில் நடந்த காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் 221 கி. புளு தூக்கி இந்தியாவிற்காக தங்கபதக்கத்தை வாங்கிய  தமிழ்மகள் அனுராதா. தமிழகத்தின் பளு தூக்கி தங்கம் வென்ற முதல் காமன்வெல்த் தங்கமங்கையுமானார்.

 

a

    

இத்தனை சாதனைகளுக்கும் தன் அண்ணன் மாரிமுத்துவும், அம்மா ராணியும் துணையாக இருந்தார்கள் என்று சொன்னவரை அவரை புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி கிராமத்தில் சந்தித்த போது.. இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு சொல்லவிரும்புவது என்ன? என்ற நமது கேள்விக்கு..


    படிப்பு என்பது முக்கியம் தான். ஆனால் படித்தவர்கள் அத்தனை பேருக்கும் அரசு வேலை கிடைக்காது. 10 சதவீதம் பேருக்கே படிப்பிற்கு ஏற்ப வேலை கிடைக்கும். 90 சதவீதம் படித்த இளைஞர்கள் கஷ்டப்படுறாங்க. ஆனால் மாணவர்கள் விளையாட்டில் சாதித்தால் அரசு வேலை நிச்சயம் உண்டு. அதனால் தான் சொல்கிறேன் படிப்போடு சேர்த்து விளையாட்டு பயிற்சியும் எடுக்க வேண்டும்.


    3 சதவீதம் வேலை விளையாட்டு வீரர்களுக்காக ஒதுக்கி இருக்கிறார்கள். அதாவது.. மாவட்ட அளவில் சாதித்தால் குரூப் 4, குரூப் 3 அளவில் வேலை யும், மாநில அளவில் வெற்றி பெற்றால் குரூப் 2 அளவில் வேலையும் கிடைக்கும். இன்டர்நேசனல் அளவில் மெடல் வாங்கினால் தேர்வு இல்லாமல் குரூப் 1 அளவில் வேலை கொடுக்கிறார்கள்.

 

நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சாலும் இது பொன்ற வேலைகள் கிடைப்பதற்காண வாய்ப்புகள் குறைவு தான். விளையாட்டில் ஆர்வமாக களமிறங்கினால் உடல் நலமும் பாதுகாக்கப்படுவதுடன் நோய்களும் வராது. உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும். அதனால் மாணவர்கள் விளையாட்டில் கவணம் செலுத்துங்கள். என்னால முடிந்த அளவுக்கும் மாணவர்களை விளையாட்டு விடுதிகளில் சேர்க்க உதவிகள் செய்வேன் என்றார்.
        

சார்ந்த செய்திகள்