நாகப்பட்டிளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று வந்தார். நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி வரவேற்றார். பின்னர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை தொகுதியில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து விவரித்தார்.
தமிமுன் அன்சாரியின் பணிகளை பாராட்டுவதாக தெரிவித்த சரத்குமார், தான் ஒரு லாரி முழுக்க கொண்டு வந்த பொருள்களை நாகை மாவட்ட மெங்கும் வினியோகிக்குமாறு கூறினார்.
அதை நாகை, கீழ்வேளுர், வேதாரண்யம் தொகுதிகளுக்கு மூன்றாக பிரித்து கொடுப்பதாக தமிமுன் அன்சாரி கூறினார். பின்னர் இருவரும் நம்பியார் நகர் பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்தனர்.
அங்கு ஒரு மீன்பிடி துறைமுகம் அமைக்க 36 கோடியில் முயற்சி நடைபெறுவதாகவும், அதில் ஒரு பங்கை இப்பகுதி மக்கள் தருவதாகவும் தமிமுன் அன்சாரி, சரத்குமாரிடம் கூறினார்.
உடனே, அம்மக்களிடம் தன் சார்பில் 50 லட்சம் இதற்கு நன்கொடையாக தருவதாகவும், 6 மாதத்திற்குள், அதை தமிமுன் அன்சாரியிடம் ஒப்படைப்பதாக அறிவித்தார்.