இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும்பொழுது கண்டிப்பாக தமிழ் மொழியும் இடம் பெற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு உத்தரவிட்டிருந்தனர்.
சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் குடமுழுக்கு விழா நடத்துவது குறித்து எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழாவை தமிழ் சைவ ஆகம விதிகளின்படி நடத்தக் கோரிய வழக்கில்தான் இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளார்கள்.
இதை தொடர்ந்து 4ஆம் தேதி நடந்த கரூர் பசுபதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில், தமிழில் சைவ மந்திரங்கள் பாடப்பட்டு குடமுழக்கு விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தாய் மொழியான தமிழ் மொழி மந்திரங்களை மகிழ்ச்சியுடன் கேட்டனர்.