Skip to main content

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை!

Published on 10/12/2017 | Edited on 10/12/2017
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை!

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துக்கொண்ட இளம்பெண்ணின் உடல் பிரேத பசிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஏற்பெட்டி கிராமத்தை சேர்ந்த அங்கால அபிராமி (23) என்பவருக்கு பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் விக்னேஷ் மணி என்பவருடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகி ஒரு மாதத்திலேயே அங்கால அபிராமியை கூடுதல் பணம், நகை, சொத்து கேட்டு மாமியார், மாமனார் கொடுமை செய்து வந்ததையடுத்து, பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், கடந்த மாதம் 27ஆம் தேதி திருப்பூர் தெற்கு அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் மனைவியை தனியாக அழைத்து சென்று குடும்பம் நடத்துவதாக கூறி கடிதம் எழுதிகொடுத்துள்ளனர் அங்கால அபிராமியின் கணவர் விக்னேஷ் மணி. ஆனால், கணவர் தன்னுடைய குடும்பத்துடன் தலைமறைவானதை அடுத்து, மனமுடைந்த அங்கால அபிராமி கடந்த இரு நாட்களுக்கு முன்பு அதிகப்படியான மாத்திரியை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இரு நாட்களாக கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். திருமணமாகி 9மாதங்களே ஆனதால், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்ணின் கணவர் விக்னேஷ் மணி, மாமனார் மணிகண்டன்,மாமியாரான பள்ளி ஆசிரியை மரகதம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து திருப்பூர் தெற்கு அனைத்து மகளீர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- அருள்

சார்ந்த செய்திகள்