Skip to main content

ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர் மர்ம மரணம் ; போலீசார் விசாரணை

Published on 20/10/2024 | Edited on 20/10/2024
nn

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள தயிர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (33). டிப்ளமோ படித்துள்ள இவர் டையிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த வாரம் இணையதளத்தில் விளம்பரத்தை பார்த்து ஆன்லைன் டாஸ்க் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். இதில் 1 லட்சத்து 13 ஆயிரத்தை இழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து லோகநாதன் ஆன்லைன் மூலம் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில் புகார் தொடர்பான விசாரணைக்கு அழைத்ததன் பேரில் லோகநாதன் தனது உறவினருடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மாலை வந்தார். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் வங்கி பரிவர்த்தனை ஆவணங்களை எடுத்து வருமாறு கூறி அனுப்பியுள்ளனர். இதற்கிடையே வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையம் அருகே சாலையோரம் உள்ள ஒரு சாக்கடையில் லோகநாதன் விழுந்து மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லோகநாதன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்ததால் லோகநாதன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லோகநாதன் மர்மமான முறையில் இறந்ததால் அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்