இன்று செப்.5 ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், 'தாய் தந்தைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள். மாணவச் செல்வங்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்நாளெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள். கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும் அறநெறிகளையும் ஒழுக்கத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மாணவ சமுதாயத்துக்குக் கற்றுத்தரும் அறிவுப் பெற்றோராக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தன்னை உருக்கி அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!' எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஆசிரியர் தினத்திற்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ‘எதிர்காலத்தை உருவாக்குவதில், கனவுகளை ஊக்குவிப்பதில் ஆசிரியர்கள் பங்கு வகிக்கின்றனர். ஆசிரியர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தாக்கத்துக்காக வாழ்த்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 5 #TeachersDay!
— M.K.Stalin (@mkstalin) September 5, 2023
தாய் தந்தைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள். மாணவச் செல்வங்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்நாளெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள். கல்வியுடன்…