Skip to main content

பள்ளி ஆசிரியர் அலட்சியம்... மாணவனின் வலது கை துண்டானது...

Published on 16/07/2018 | Edited on 16/07/2018
accident

 

 

 

 

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர், இதில் கல்பாக்கத்தில் செயல்படும் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த மூன்றுநாட்களாக நடத்தி வருகின்றது. 

 

இதில் கலந்துக்கொள்ள தேர்வு செய்யப்பட்ட 37 மாணவர்களை திருப்பேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து உடற்பயிற்சி ஆசிரியர் அன்பரசன் தனக்கு சொந்தமான டாடா ஏசி லோடு ஆட்டோவில் சட்டத்துக்கு புறம்பாக 37 மாணவர்களையும் ஆடு, மாடுகளை ஏற்றுவதைப்போல ஏற்றிக்கொண்டு அன்பரசனும்  உடன் சென்றார் கிட்டதட்ட டிரைவருடன் 38 பேரை ஏற்றிக்கொண்டு திருப்பேரூரில் இருந்து கல்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த லோடு ஆட்டோ ஆலத்தூரை கடந்து கருங்குழி என்னுமிடத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா அருகே வந்துக்கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கழிந்து விபத்துக்குள்ளாகியது.

 

இதில் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர் இதில் ஆலத்தூரை சேர்ந்த  பிரகாஷ் என்ற மாணவனின் கை லோடு ஆட்டோவின் கீழ் மாட்டியதில் அவன் கை துண்டானது உடனே விரைந்துவந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் பொதுமக்கள் சிலரும் மாணவர்களை உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்றனர். மாணவன் பிரகாஷை மட்டும் கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர்.

 

 

 

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், மாணவனின் கை மட்டும் சிகிச்சையில் மீண்டும் இணையாவிட்டால் அவனின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும், சம்பவத்துக்கு காரணமான உடற்பயிற்சி ஆசிரியர் அன்பரசனின் பண ஆசையாலும், அலட்சியத்தாலும் நடந்த விபத்தை கண்டித்து மக்கள் போராடிவரும் நிலையில் உடற்பயிற்சி ஆசிரியர் அன்பரசன் தலைமறைவாக உள்ளார் அவரை போலீஸ்சார் தேடிவருகின்றா, மாமல்லபுரம் டி.எஸ்.பி அமல்ராஜ் வழக்கை விசாரித்து வருக்கின்றனர் 
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்